​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலம் - சென்னை 8வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடும் எண்ணம் அரசுக்கு இல்லை - நிதின் கட்கரி

Published : Jul 31, 2018 11:04 PM



சேலம் - சென்னை 8வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடும் எண்ணம் அரசுக்கு இல்லை - நிதின் கட்கரி

Jul 31, 2018 11:04 PM

சேலம் - சென்னை 8வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடும் எண்ணம் அரசுக்கு இல்லை என மத்தியச் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நிதின் கட்கரி எழுத்து மூலம் அளித்த பதிலில், 8வழிச்சாலைத் திட்டத்தால் உயிரிப் பன்மயத்துக்கும் காடுகளுக்கும் சேதம் ஏற்படும் எனக் கூறிச் சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நில எடுப்பை எதிர்த்து விவசாயி தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 8வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடும் எண்ணமில்லை என்றும், இந்தத் திட்டத்தால் அந்தப் பகுதியில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பதை மக்களுக்கு எடுத்துக் கூற அரசு முயற்சி எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.