​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குரூப்-4 தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு இணையதளம் வாயிலாகவே சான்றிதழ் சரிபார்ப்பு பணி

Published : Jul 31, 2018 6:22 PM



குரூப்-4 தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு இணையதளம் வாயிலாகவே சான்றிதழ் சரிபார்ப்பு பணி

Jul 31, 2018 6:22 PM

குரூப்-4 தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு இணையதளம் வாயிலாகவே சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குரூப்4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், தேர்வு எழுதியவர்களில் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தகுதி மதிப்பெண் பெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு பணி, ஆன்லைனில் நடைபெறும் என்பதால், வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை இ-சேவை மையங்கள் மூலமாக சான்றிதழ்களை பதிவேற்றலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் மாத இறுதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்து, கவுன்சிலிங் நடைபெறும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.