​​ முதலையின் வாய்க்குள் கையை நுழைத்தவருக்கு நேர்ந்த பரிதாபம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதலையின் வாய்க்குள் கையை நுழைத்தவருக்கு நேர்ந்த பரிதாபம்

முதலையின் வாய்க்குள் கையை நுழைத்தவருக்கு நேர்ந்த பரிதாபம்

Jul 31, 2018 12:03 PM

தாய்லாந்தில் சாகச நிகழ்ச்சியின் போது முதலை ஒருவரை கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஷியாங் ரே ((Chiang Rai)) என்ற இடத்தில் முதலைப் பண்ணையில் வேலைபார்த்து வருபவர் தாவோ ((Tao)). இவர் முதலையின் வாய்க்குள் தனது கையை நுழைத்து சாகசம் செய்து வந்தார்.

அதேபோல் நேற்றும் வழக்கம் போல் முதலையின் வாய்க்குள் தனது கையை முழுமையாக நுழைத்து சாகசம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தாவோவின் கையை முதலை கடித்து குதறியது. இதில் நூலிழையில் உயிர் தப்பிய தாவோவின் கை முறிந்தது. பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.