​​ திருச்செந்தூர் அய்யா வைகுண்ட சுவாமி கோயில் தேரோட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்செந்தூர் அய்யா வைகுண்ட சுவாமி கோயில் தேரோட்டம்

திருச்செந்தூர் அய்யா வைகுண்ட சுவாமி கோயில் தேரோட்டம்

Jul 31, 2018 11:57 AM

திருச்செந்தூரில் உள்ள அய்யா வைகுண்ட சுவாமி கோயிலில் ஆடி திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக போராடியதோடு, பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர் அய்யா வைகுண்ட சுவாமி.

இவர் அவதரித்த தலமான திருச்செந்தூர்,  அவதார பதியாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய ஆடி திருவிழாவில், 11-ஆம் நாளான திங்களன்று தேரோட்டம் நடைபெற்றது. சகல பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் தொடங்கிய தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று அய்யா வைகுண்டசுவாமியை வழிபட்டனர்.