​​ நடிப்பு மற்றும் நடனத் திறனை நிரூபித்துக் காட்டினால், ஸ்ரீரெட்டிக்கு திரைப்பட வாய்ப்பு வழங்கத் தயார் : ராகவா லாரன்ஸ்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிப்பு மற்றும் நடனத் திறனை நிரூபித்துக் காட்டினால், ஸ்ரீரெட்டிக்கு திரைப்பட வாய்ப்பு வழங்கத் தயார் : ராகவா லாரன்ஸ்

நடிப்பு மற்றும் நடனத் திறனை நிரூபித்துக் காட்டினால், ஸ்ரீரெட்டிக்கு திரைப்பட வாய்ப்பு வழங்கத் தயார் : ராகவா லாரன்ஸ்

Jul 30, 2018 9:46 PM

நடிப்பு மற்றும் நடனத் திறனை நிரூபித்துக் காட்டினால், ஸ்ரீரெட்டிக்கு திரைப்பட வாய்ப்பு வழங்கத் தயாராக இருப்பதாக, இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்த நடிகை ஸ்ரீரெட்டி, தமிழ்த் திரையுலகிலும், சில இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், அவரது புகார்களுக்கு பதிலளித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், ஸ்ரீரெட்டி கடந்த 7 ஆண்டுகளாக இதுபற்றி கூறாமல், தற்போது குற்றஞ்சாட்டுவது ஏன் என கேட்டுள்ளார்.

மேலும் நடிகை ஸ்ரீரெட்டியின் பேட்டிகளைப் பார்த்து, அவர் மீது பரிதாபப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் முன்பு, ஒரு காட்சியையும், எளிமையான நடன அசைவையும் நடிகை ஸ்ரீரெட்டிக்கு தருவதாகவும், அப்போது நடிப்பு மற்றும் நடனத் திறமையை நிரூபித்துவிட்டால், ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு வழங்க, தாம் தயாராக இருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.