​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்குக் கலந்தாய்வு

Published : Jul 30, 2018 4:11 PM

தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்குக் கலந்தாய்வு

Jul 30, 2018 4:11 PM

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் இன்று தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 12தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடாக 723எம்பிபிஎஸ் இடங்களும், 645 பல்மருத்துவ இடங்களும் உள்ளன.

எம்பிபிஎஸ் படிப்பில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. நிர்வாக ஒதுக்கீட்டில் பல்மருத்துவப் படிப்புக்கான இடங்களுக்குக் கலந்தாய்வு பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.