​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செயற்கைக்கோளில் பயன்படுத்தும் சோலார் செல்களை இந்தியாவிலேயே தயாரிக்கத் திட்டம் - சிவன் தகவல்

Published : Jul 30, 2018 12:23 PM

செயற்கைக்கோளில் பயன்படுத்தும் சோலார் செல்களை இந்தியாவிலேயே தயாரிக்கத் திட்டம் - சிவன் தகவல்

Jul 30, 2018 12:23 PM

செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்படும் சோலார் செல்களை இந்தியாவிலேயே தயாரிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தயாராகி வருவதாக அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் சரக்கல்விளையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் சிவன், அவர் படித்த அரசு தொடக்கப் பள்ளியில் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ், செயற்கைக் கோள்களில் பயன்படுத்தப்படும் சோலார் செல்களை இந்தியாவிலேயே தயாரிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தயாராகி வருவதாகத் தெரிவித்தார்.