​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இதமான சூழலால் கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்..!

Published : Jul 30, 2018 11:21 AM



இதமான சூழலால் கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்..!

Jul 30, 2018 11:21 AM

கொடைக்கானலில் சாரல் மழை பெய்ததால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த ஒரு வாரமாக அங்கு வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டதால், சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்து போனது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டத்துடன், அவ்வப்போது மிதமான சாரல் மழையும் பதிவாகி வருகிறது.

இதனால், சுற்றுலாப்பயணிகள் வருகையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. பைன் மரக்காடுகள், பில்லர் ராக், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர் வாக், பிரையண்ட் பூங்கா ஆகிய இடங்களில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. மேகமூட்டங்களையும், தேகம் தீண்டும் சாரல் மழையையும் சுற்றுலா பயணிள் வெகுவாக ரசித்து அனுபவிக்கின்றனர்.