​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க 27,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது -முதலமைச்சர்

Published : Jul 30, 2018 11:13 AM



அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க 27,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது -முதலமைச்சர்

Jul 30, 2018 11:13 AM

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர், சேலம் போஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்றார். நேற்று மாலை, பொருட்காட்சியை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக குறிப்பிட்டார்.

இதன் மூலம் இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்பவர்களை அதிகமாகக் கொண்ட முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.

 

அரசியல் லாபத்துக்காக சிலர் அ.தி.மு.க. அரசை விமர்சனம் செய்து வருவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை பட்டியலிட்டு சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் இதுவரை சுமார் 39,000 ரூபாய் மதிப்பில், 48,504 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், இதுவரை 8,107 கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் முதலைமைச்சர் பட்டியலிட்டார்.