​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தி.மு.க தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து அறிக்கை

Published : Jul 30, 2018 4:40 AM



தி.மு.க தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து அறிக்கை

Jul 30, 2018 4:40 AM

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் தொண்டர்கள் அமைதி காக்குமாறும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு நல்கிடவும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறியிருப்பது போல், கருணாநிதியின் உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஒரு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதாகவும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல் நிலை சீராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். கருணாநிதிக்கு மருத்துவர் குழு தொடர்ந்து சிகிச்சையளித்து வருவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.


திமுக தொண்டர்கள் எந்தவித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுத்து விடாமலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் அமைதி காத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு நல்கிடுமாறு மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.





  1. Suresh kumar

    Leader is greater than all others

    Reply
  2. Suresh kumar

    Leader is greater than all others

    Reply