​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்

Published : Jul 30, 2018 2:56 AM

கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்

Jul 30, 2018 2:56 AM


தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு - காவேரி மருத்துவமனை

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிகமாக பின்னடைவு - காவேரி மருத்துவமனை

கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் - காவேரி மருத்துவமனை

கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இரவு 9.50 மணிக்கு காவேரி மருத்துவமனை செய்திக்குறிப்பு

தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் காவேரி மருத்துவமனைக்கு வருகை

மருத்துவமனை முன்பு இருக்கும் தி.மு.க தொண்டர்கள் அமைதி காக்குமாறு போலீசார் மைக் மூலம் வேண்டுகோள்

கலைஞர் உடல்நிலை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளதால் தி.மு.க தொண்டர்கள் கலைந்து செல்ல வேண்டும் - போலீஸ்

மருத்துவமனை முன்பு திரண்டிருக்கும் தொண்டர்கள் கலைந்து செல்ல வேண்டும் - போலீஸ்

கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க வருகை தரும் மருத்துவ குழுவுக்கு வழிவிடுமாறு தி.மு.க தொண்டர்களுக்கு போலீஸ் வேண்டுகோள்

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார்


தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார்

தி.மு.க முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒவ்வொருவராக மருத்துவமனையில் இருந்து வெளியேறுகின்றனர்