​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கல்குவாரியால் நெல்லையில் அணை உடையும் ஆபத்து?

Published : Jul 29, 2018 11:21 PM

கல்குவாரியால் நெல்லையில் அணை உடையும் ஆபத்து?

Jul 29, 2018 11:21 PM

நெல்லை மாவட்டம் கடையத்தில் உள்ள இராமநதி அணை, அருகில் இருக்கும் கல் குவாரியால் பலவீனம் அடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

84 அடி உயரமுள்ள இந்த அணையில், 152 மில்லியன் கன அடி நீரைத் தேக்க முடியும். சுற்றுவட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் மற்றும் பாசனத் தேவையை இந்த அணை நிவர்த்தி செய்கிறது. ஆனால் அணையின் சுவரில் இருந்து அதிகளவில் நீர் கசிவது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை கவலை அடையச் செய்துள்ளது.

image

அருகில் செயல்படும் சக்தி என்ற கல்குவாரி தான் அணை பலவீனம் அடைவதற்கு காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2005ஆம் ஆண்டு பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, இந்த கல்குவாரிக்கு அனுமதி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

image

ஆரம்பத்தில் அணையில் இருந்து சற்று விலகி இருந்த கல் குவாரியானது தற்போது 400 மீட்டருக்கு அருகே வந்து விட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இரவில் அதிக வலிமை உடைய வெடிகளை வைத்து பாறைகளை தகர்ப்பதால் அணையின் சுவர் பலவீனம் அடைந்து தண்ணீர் கசிவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

image

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீசிடம் முறையிட்டதாகவும், ஆனால் கல்குவாரியால் எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளதாக கூறியதாக தெரிவித்தனர். இருப்பினும் அணைப் பாதுகாப்புக் குழு அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்ததாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர். அணைக்கு ஆபத்தாக உள்ள குவாரியை மூடுவதே நிரந்தர தீர்வு எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.





  1. Bharatg

    Aatha sonan manu allathiga

    Reply