​​ மரபணு மூலம் நோய்க் கூறுகள் பரவுவதை தடுக்கும் சிகிச்சை பெற்று, இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பெண்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மரபணு மூலம் நோய்க் கூறுகள் பரவுவதை தடுக்கும் சிகிச்சை பெற்று, இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பெண்

Published : Jul 29, 2018 4:49 PM

மரபணு மூலம் நோய்க் கூறுகள் பரவுவதை தடுக்கும் சிகிச்சை பெற்று, இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பெண்

Jul 29, 2018 4:49 PM

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மரபணு மூலம் குழந்தைக்கு புற்றுநோய் பரவுவதை தடுக்கும் சிகிச்சை பெற்று, இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த Swayam Prabha என்ற பெண், 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல் பரிசோதனை செய்தபோது, அவருக்கு மார்பக புற்றுநோய்க் கூறு இருப்பதை அறிந்து கொண்டார். இதே புற்றுநோயால் தனது தாயும், சித்தியும் உயிரிழந்ததையும் உறுதிப்படுத்தினார். மரபணு மூலம் இந்த நோய்க்கூறு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுவதை தெரிந்து கொண்ட அவர், தனது குழந்தைகளுக்கும் இதுபோன்று நிகழக் கூடாது என முடிவு செய்து, குழந்தைகள் நல சிகிச்சை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, மரபணுவில் இருந்து குழந்தைக்கு கடத்தப்படும் நோய்க் கூறுகளை களைந்த மருத்துவர்கள், செயற்கை முறையில் Swayam Prabhaவை கருத்தரிக்க வைத்தனர். தற்போது அவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதுபோல் மரபணுவில் நோய்க்கூறுகளை களைந்து, குழந்தை பெற்றிருப்பது இந்தியாவிலேயே முதல்முறை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.