​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
Amazon, Netflix-க்கு போட்டியாக களமிறங்குகிறது YouTube

Published : Jul 29, 2018 3:56 PM

Amazon, Netflix-க்கு போட்டியாக களமிறங்குகிறது YouTube

Jul 29, 2018 3:56 PM

அமேசான், நெட்ஃபிலிக்ஸ் உள்ளிட்டவற்றுக்கு போட்டியாக, கட்டண நிகழ்ச்சிகளைக் களமிறக்க யூடியூப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மாத சந்தா அடிப்படையில் ஏற்கெனவே "யூடியூப் ரெட்" எனும் பெயரில் வழங்கப்பட்டு வரும் சேவையில், பிரத்யேக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளதாக யூடியூபின் நிகழ்ச்சிகளுக்கான தலைவர் சுசான்னே டேனியல்ஸ் கூறியுள்ளார்.

இசை, ஆவணப் படம், ரியாலிட்டி ஷோக்கள், நாடகத் தொடர்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து ஒளிபரப்ப வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், மெக்ஸிகோ, மற்றும் இந்தியா உள்ளிட்ட சந்தைகளை குறிவைத்து களமிறங்க யூடியூப் திட்டமிட்டுள்ளது.