​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கருப்பு மாம்பாவை மிக அருகில் படம் எடுத்து புகைப்பட நிபுணர் சாதனை

Published : Jul 29, 2018 12:34 PM



கருப்பு மாம்பாவை மிக அருகில் படம் எடுத்து புகைப்பட நிபுணர் சாதனை

Jul 29, 2018 12:34 PM

உலகின் மிகக் கொடிய விஷப்பாம்பான கருப்பு மாம்பாவை மிக அருகில் படம் எடுத்து புகைப்பட நிபுணர் ஒருவர் சாதனை புரிந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரைச் சேர்ந்தவர் பாம்புகள் ஆர்வலரான கெர்ஹர்டு வான் டெர் ((Gerhard Van der)).

image

இவர் உலகின் மிகக் கொடிய விஷப்பாம்புகளில் ஒன்றான கருப்பு மாம்பா பாம்பினை மிக அருகில் புகைப்படம் எடுக்கும் ஆர்வம் கொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக பாம்பின் அருகில் சென்றவர் ஒரு கட்டத்தில் தனது உருவம் பாம்பின் கண்களில் தெரியும் அளவிற்கு நெருக்கமாகச் சென்று புகைப்படம் எடுத்துள்ளார்.

தற்போது இந்தப் படங்களை கெர்ஹர்டு வெளியிட்டுள்ளார். இதனிடையே இந்தப் படத்தின் உண்மைத் தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.