​​ தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் விவரங்களை அளிக்கத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் விவரங்களை அளிக்கத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு


தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் விவரங்களை அளிக்கத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

Jul 27, 2018 11:55 PM

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறைகள், துப்பாக்கிச் சூடு ஆகியவை தொடர்பாகக் காவல்துறையினர் இருநூற்றுக்கு மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்ததை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி செல்வம், பசீர் அகமது ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மே 22 அன்று தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அனைத்துக் குற்றச்சம்பவங்களைக் குறிப்பிட்டுக் குற்ற எண் 191 இன் கீழ் வழக்குப் பதிந்துள்ள நிலையில் அதே சம்பவங்களுக்கு 172வழக்குகள் பதிந்தது எப்படி என மனுதாரரின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்துத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையைத் திங்கட்கிழமைக்குத் தள்ளி வைத்தனர்.