​​ முருகதாஸ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டது உண்மை தான் : ஸ்ரீரெட்டி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முருகதாஸ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டது உண்மை தான் : ஸ்ரீரெட்டி


முருகதாஸ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டது உண்மை தான் : ஸ்ரீரெட்டி

Jul 27, 2018 8:58 PM

ராகவாலாரன்ஸ், ஸ்ரீகாந்த், மற்றும் முருகதாஸ் ஆகியோர் தம்மைத் பாலியல் ரீதியாக  பயன்படுத்தியது உண்மைதான் என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

தம்மை விலைமாது எனக் கூறிய வாராகி மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தெலுங்கு திரைப்பட நடிகை ஸ்ரீரெட்டி புகாரளித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வீண் விளம்பரத்திற்காக வாராகி தம்மை ஊடகங்களில் தவறாகப் பேசியதாகவும், தம்மை மிரட்டும் வகையில் பேசிய அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தாம் விலைமாது அல்ல என்றும், தாம் பணம் வாங்கியதை வாராகி பார்த்தாரா? அல்லது அவர் பணம் பெற்றுத் தந்தாரா? என்றும் ஸ்ரீரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார். சினிமா துறையில் தம்மைப் போல் வேறு யாரும் ஏமாறக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தவே தாம் ஏமாற்றப்பட்ட தகவலை வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ராகவாலாரன்ஸ், ஸ்ரீகாந்த், மற்றும் முருகதாஸ் ஆகியோர் தன்னை ஏமாற்றியதாகவும் ஸ்ரீரெட்டி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.