​​ இயக்குநர் மணிரத்னத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இயக்குநர் மணிரத்னத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

இயக்குநர் மணிரத்னத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

Jul 26, 2018 9:52 PM

திரைப்பட இயக்குநர் மணிரத்னம் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மட்டுமில்லாது பல்வேறு மொழிகளில் முன்னணி திரைப்பட இயக்குநராக உள்ள மணி ரத்னத்துக்கு வயது 63. தற்போது தமிழ் உள்ளிட்ட மொழிகளில்  விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிலம்பரசன் நடிப்பில் செக்கச் சிவந்த வானம் என்ற படத்தின் இறுதிக்கப்பட்ட பணிகளில் மணி ரத்னம் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். 

இந்நிலையில், இன்று பிற்பகல் ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் பணியில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவரது உதவியாளர்கள் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது.  மணிரத்னத்துக்கு ஏற்கெனவே ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்,  வழக்கமான பரிசோதனைக்கே வந்துள்ளதாகவும் அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும் மணிரத்னம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.