​​ ஹாலிவுட்டில் டிரம்பை கவுரவித்து பதிக்கப்பட்டிருந்த சிறப்பு நட்சத்திர வடிவம் சேதம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹாலிவுட்டில் டிரம்பை கவுரவித்து பதிக்கப்பட்டிருந்த சிறப்பு நட்சத்திர வடிவம் சேதம்

Published : Jul 26, 2018 9:48 PM

ஹாலிவுட்டில் டிரம்பை கவுரவித்து பதிக்கப்பட்டிருந்த சிறப்பு நட்சத்திர வடிவம் சேதம்

Jul 26, 2018 9:48 PM

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீசில் உள்ள ஹாலிவுட்டில், அதிபர் டிரம்பை பெருமைப்படுத்தும் வகையில் பதிக்கப்பட்டிருந்த, Hollywood Walk of Fame என்ற சிறப்பு நட்சத்திர வடிவம் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

image

பிரபலங்களை கெளரவப்படுத்தும் வகையில், ஐந்து இதழ்கள் கொண்ட இளஞ்சிவப்பு நட்சத்திரங்களுக்கு நடுவில் பித்தளை எழுத்துகளில் பெயர் வடிக்கப்பட்டு, ஹாலிவுட் அரண் சாலையை ஒட்டிய நடைமேடையில் பதிக்கப்படுகின்றன. இவ்வாறு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை கவுரப்படுத்தி பதிக்கப்பட்டிருந்த சிறப்பு நட்சத்திர வடிவம், சேதப்படுத்தப்பட்டது.

சேதப்படுத்திய 24 வயது இளைஞரான ஆஸ்டின் கிளே என்பவர், காவல்துறையில் சரணடைந்தார். பின்னர் அவரை கைது செய்த போலீசார், 14 லட்ச ரூபாய் மதிப்பில் ஜாமீனில் விடுவித்தனர்.