​​ சிரியாவில் தற்கொலைப் படை தீவிரவாதி தாக்குதலில் 32 பேர் பலி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிரியாவில் தற்கொலைப் படை தீவிரவாதி தாக்குதலில் 32 பேர் பலி

சிரியாவில் தற்கொலைப் படை தீவிரவாதி தாக்குதலில் 32 பேர் பலி

Jul 25, 2018 7:36 PM

சிரியாவில் ஸ்வெய்தா (Sweida) நகரில் தற்கொலைப் படையைச் சேர்ந்த நபர் நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஸ்வெய்தாவில் உள்ள பரபரப்பான சந்தைப் பகுதியில் தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவன் தமது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தான்.

இதில் 32 பேர் பலியானதோடு, 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தற்கொலைப் படையைச் சேர்ந்த மேலும் இருவர் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்யும் முன்பாக பாதுகாப்புப் படையினர் அவர்களை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர்.