​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
100 விழுக்காடு தேர்ச்சிபெற்ற அரசு பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு

Published : Jul 24, 2018 6:20 PM

100 விழுக்காடு தேர்ச்சிபெற்ற அரசு பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு

Jul 24, 2018 6:20 PM

சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளாகப் பத்தாம் வகுப்புத் தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற சென்னை ஜாபர்கான் பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.  அதன்பின் பேசிய அவர், சென்னை மாநகராட்சி நிர்வாகம் சிறப்பான முறையில் பள்ளிகளை நிர்வகித்து வருவதாகத் தெரிவித்தார்.

தொண்ணூறு விழுக்காடு மாநகராட்சிப் பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சிபெற மாணவர்களைத் தயார் செய்து வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.