​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விமான நிலையத்தில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் சண்டை?

Published : Jul 24, 2018 5:47 PM

விமான நிலையத்தில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் சண்டை?

Jul 24, 2018 5:47 PM

மும்பை விமான நிலையத்தில் மனைவி ஐஸ்வர்யா ராயுடன் சண்டையிட்டதாக வெளியான செய்தி தவறானது என நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இருந்து இவர்கள் மும்பை திரும்பிய போது, மகள் ஆராத்யாவின் கையைப் பிடிக்க அபிஷேக் பச்சன் முயன்றார். இதற்கு ஐஸ்வர்யா ராய் அனுமதிக்கவில்லை.

இந்த வீடியோவை வைத்து இருவரும் சண்டையிட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை மறுத்துள்ள அபிஷேக் பச்சன், இணையதள பத்திரிகைக்கு தொடர்ந்து செய்தி வெளியிட வேண்டும் என்ற அவசியம் இருப்பதை தம்மால் புரிந்து கொள்ள முடிவதாகவும், அதே வேளையில் தவறாக செய்தி வெளியிடுவதை தவிர்க்குமாறும் ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொறுப்புடைமையுடன், தவறான நோக்கம் ஏதுமின்றி செய்தி வெளியிடும் பட்சத்தில் அதை பாராட்டுவதாகவும் அபிஷேக் பச்சன் குறிப்பிட்டுள்ளார்.