​​ குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வசதியாக லக்சம்பர்க் காவல்துறைக்கு டெஸ்லா மின்சாரக் கார்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வசதியாக லக்சம்பர்க் காவல்துறைக்கு டெஸ்லா மின்சாரக் கார்கள்


குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வசதியாக லக்சம்பர்க் காவல்துறைக்கு டெஸ்லா மின்சாரக் கார்கள்

Jul 22, 2018 7:46 PM

குற்றவாளிகளையும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களையும் விரைந்து பிடிக்க வசதியாக லக்சம்பர்க் காவல்துறை டெஸ்லா மின்சாரக் கார்களை வாங்கியுள்ளது.

ஐரோப்பாவில் உள்ள மிகச் சிறிய நாடான லக்சம்பர்க்கில் போக்குவரத்து விதிகளை மீறி அதிவிரைவாக வாகனத்தில் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. இதைத் தடுக்கவும் குற்றவாளிகளை மடக்கிப் பிடிக்கவும் சிலநொடிகளுக்குள் மணிக்கு நூறுகிலோமீட்டர் வேகத்தை எட்டக்கூடிய டெஸ்லா மின்சாரக் கார்களில் இரண்டைக் காவல்துறை வாங்கியுள்ளது.

கடந்த மே மாதம் வாங்கப்பட்ட இவ்வகைக் காரின் விலை இந்திய மதிப்பில் எண்பது லட்ச ரூபாய் ஆகும். லக்சம்பர்க் நாட்டில் இயங்குவதில் பத்து விழுக்காடு வாகனங்கள் மின்சாரக் கார்களாக இருக்கும் என அறிவித்துள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாகவும் இந்த மின்சாரக் கார்கள் வாங்கப்பட்டுள்ளன.