​​ கூவம் ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கூவம் ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

கூவம் ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

Jul 21, 2018 5:49 PM

சென்னை கோட்டூர்புரம் கூவம் ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சென்னை கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ரம்யா மீனா முத்தையா கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், ரம்யாவைக் காணவில்லை என பெற்றோர் இரவு 9மணி அளவில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

நேற்று இரவு 9.30மணி அளவில் கூவம் ஆற்றில் பெண் ஒருவர் குதித்ததாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது- இதனை அடுத்து,  தீயணைப்புத்துறையினர் மேற்கொண்ட மீட்பு பணியில்  ரம்யாவின் சடலம் இன்று காலை 8 மணியளவில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.