​​ போலி பயிற்சியாளர் ஆறுமுகத்துக்கு வரும் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலி பயிற்சியாளர் ஆறுமுகத்துக்கு வரும் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

போலி பயிற்சியாளர் ஆறுமுகத்துக்கு வரும் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Jul 21, 2018 12:45 AM

கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது தள்ளிவிடப்பட்டு மாணவியைக் கொன்றதாக கைதான போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை வரும் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நரசிபுரம் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த 12 ஆம் தேதி நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது, நாதேகவுண்டன்புதூரைச் சேர்ந்த மாணவி லோகேஸ்வரி மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டார்.

இதில் அவர் பலியானதையடுத்து, போலி பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். அவரை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த செவ்வாயன்று கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் போலீசாருக்கு அனுமதி அளித்தது.

4 நாள்கள் நடந்த விசாரணை வெள்ளியன்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஆறுமுகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, வரும் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கண்ணன் உத்தரவிட்டதன்பேரில், ஆறுமுகம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.