​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் தொண்டுநிறுவனம் சார்பில் அமைக்கப்படும் குளத்தை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு

Published : Jul 20, 2018 10:45 PM

தனியார் தொண்டுநிறுவனம் சார்பில் அமைக்கப்படும் குளத்தை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு

Jul 20, 2018 10:45 PM

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப் பாளையம் அருகே தனியார் தொண்டுநிறுவனம் சார்பில் அமைக்கப்படும் குளத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் சீரமைப்புப் பணிகளும், மழைநீர் மற்றும் கசிவு நீரை தேக்க வசதியற்ற கிராமங்களில் புதிதாக குளங்கள், குட்டைகள் அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. அந்த வகையில் கோபிச்செட்டிபாளையத்தை அடுத்த மூணாம்பள்ளி கீழ்பவானி வாய்க்கால் அருகே தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்படும் குட்டையை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் செங்கோட்டையன், குட்டையில் அரசு சார்பில் மதகுகள் மற்றும் காங்கிரீட் தளங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.