​​ 7 மாத கர்ப்பிணியின் வயிற்றில் சத்துணவு அமைப்பாளர் எட்டி உதைத்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
7 மாத கர்ப்பிணியின் வயிற்றில் சத்துணவு அமைப்பாளர் எட்டி உதைத்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

7 மாத கர்ப்பிணியின் வயிற்றில் சத்துணவு அமைப்பாளர் எட்டி உதைத்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

Jul 20, 2018 2:24 AM

நாமக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணியாக இருந்த அங்கன்வாடி சமையலர், சத்துணவு அமைப்பாளர் எட்டி உதைத்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராசிபுரம் பாரதிதாசன் சாலையில் உள்ள நகராட்சி அங்கன்வாடி மையத்தில் சமையலராக உள்ளவர் தனலட்சுமி. 7 மாத கர்ப்பிணியான தனலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் உமா, அரிசி, முட்டை போன்றவற்றை வெளியே கொண்டு சென்று விற்பதாக, உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக சொல்லப் படுகிறது. இதுகுறித்து வியாழனன்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தனலட்சுமியை உமா வயிற்றில் எட்டி உதைத்தாக சொல்லப்படுகிறது.

இதில் சுருண்டு விழுந்த தனலட்சுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் முதலில் ராசிபுரத்திலும், பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் அடிப்படையில் ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.