​​ பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் இயற்ற வலியுறுத்தல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் இயற்ற வலியுறுத்தல்

Published : Jul 19, 2018 3:14 AM

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் இயற்ற வலியுறுத்தல்

Jul 19, 2018 3:14 AM

சிறார் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை அளிக்கும் நிரந்தர சட்ட மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

கத்துவா, உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பிறகு பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்களை வலுத்தன. இதையடுத்து பாலியல் வன்கொடுமையில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் விதத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் ஒப்புதலுடன் அவசர சட்டம் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த நிலையில் அவசர சட்டத்திற்கு பதிலாக நிரந்தர சட்டம் கொண்டு வரும் விதத்தில் சட்டமசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டமசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின் அமலுக்கு வரும்.

இதே போன்று சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு 2020ஆம் ஆண்டு வரை 5338 கோடி ரூபாய் செலவில் 70 லட்சம் கல்வி உதவித்தொகைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை களைய நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கிற்கு உதவித்தொகைக்கான பணம் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2018 - 2019 ஆம் ஆண்டு கரும்புக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை ஒரு குவிண்டாலுக்கு 20 ரூபாய் உயர்த்தி 275 ரூபாயாக நிர்ணயித்து மத்திய அமைச்சர்வை ஒப்புதல் அளித்துள்ளது.