​​ தாய்லாந்தில் குகையில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்ட பிரிட்டன் வீரரை விமர்சித்ததற்காக எலன் மஸ்க் வருத்தம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தாய்லாந்தில் குகையில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்ட பிரிட்டன் வீரரை விமர்சித்ததற்காக எலன் மஸ்க் வருத்தம்

Published : Jul 18, 2018 7:20 PM

தாய்லாந்தில் குகையில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்ட பிரிட்டன் வீரரை விமர்சித்ததற்காக எலன் மஸ்க் வருத்தம்

Jul 18, 2018 7:20 PM

தாய்லாந்தில் குகையில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்ட பிரிட்டன் வீரரை விமர்சித்ததற்காக டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் வருத்தம் தெரிவித்தார்.

குகையில் சிக்கியோரை மீட்பதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில் சிறிய ரக நீர்மூழ்கி போன்ற ஒரு அமைப்பு தயார் செய்யப்பட்டது. இந்த யுக்தியை பிரிட்டனைச் சேர்ந்த நீச்சல் வீரர் வெர்ன் அன்ஸ்வொர்த் (Vern Unsworth) விமர்சித்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட எலன் மஸ்க், சிறுவர்கள் மீது பாலியல் ஆசை கொண்டவர் என அன்ஸ்வொர்த்தை சாடினார்.

இதற்காக எலன் மஸ்கிற்கு எதிராக வழக்கு தொடர முடிவு அவர் செய்துள்ளதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது தமது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள எலன் மஸ்க், இந்தப் பிரச்சனையில் தவறு தன்னுடையது மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.