​​ செம்மரக்கடத்தல் விவகாரத்தில் தெலுங்கு சின்னத்திரை நடிகர் கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செம்மரக்கடத்தல் விவகாரத்தில் தெலுங்கு சின்னத்திரை நடிகர் கைது


செம்மரக்கடத்தல் விவகாரத்தில் தெலுங்கு சின்னத்திரை நடிகர் கைது

Jul 17, 2018 9:47 PM

ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் தொடர்புடையதாக தெலுங்கு சின்னத்திரை நடிகரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பதி அருகே மங்களம் பகுதியைச் சேர்ந்த ஹரி என்ற அவர், தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களிலும், சில திரைப்படங்கலும் நடித்து வருகிறார்.

சில தெலுங்கு திரைப்படங்களுக்கு பைனான்சும் செய்து வருகிறார். ஆந்திராவிலிருந்து வெளிநாடுகளுக்கு செம்மரங்கள் கடத்தப்பட்டது குறித்த 20 வழக்குகளில் ஹரிக்கும் தொடர்பிருப்பதாக கடந்த மாதம் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வந்த நிலையில், இன்று காலை திருப்பதி நீதிமன்றத்தில் சரணடைய வந்த ஹரியை அலிபிரியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.