​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

Published : Mar 08, 2018 1:35 AM

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

Mar 08, 2018 1:35 AM

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற உள்ள மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மதுரை பொதுக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் என்ற தமது கட்சியின் பெயரை அறிவித்த கமலஹாசன், முதல் முறையாக தலைநகர் சென்னையில் வியாழனன்று பொதுக்கூட்டம் நடத்துகிறார். மகளிர் தினமான வியாழனன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் மகளிருடன் கமலஹாசன் கலந்துரையாட உள்ளார்.  கூட்டம் நடைபெற உள்ள, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், சுமார் இரண்டாயிரத்து 500 பேர் அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் அரங்கு தயாராகி வருகிறது.