​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடித்துவிட்டு வீட்டில் கத்திக்கொண்டிருந்த தந்தையை கொன்ற மகன் உட்பட இருவர் கைது..!

Published : Jun 10, 2023 6:24 PM

குடித்துவிட்டு வீட்டில் கத்திக்கொண்டிருந்த தந்தையை கொன்ற மகன் உட்பட இருவர் கைது..!

Jun 10, 2023 6:24 PM

சென்னையில், குடித்துவிட்டு வீட்டில் கத்திக் கொண்டிருந்த தந்தையின் வாயில் துணியால் அழுத்தி மகன் தள்ளி விட்டதில் உயிரிழந்தார்.

அயனாவரத்தைச் சேர்ந்த காவலாளியான சுகுமாரன் சுயநினைவின்றி இருப்பதாகக் கூறி அவரது குடும்பத்தினர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உடலை உடற்கூராய்வுக்கு செய்தனர். அப்போது, உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்ததால் அயனாவரம் போலீஸார் விசாரணையில் இறங்கினர்.

விசாரணையில், நேற்றிரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த சுகுமாரன், தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

வீட்டிலிருந்த மகன் விக்னேஷ், உறவினர் சதீஷ் ஆகியோர் அவரை சமாதானப்படுத்தியும் கேட்காமல் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அவரை சமாளிக்க முடியாமல் வாயில் துணியை வைத்து அழுத்தி அறைக்குள் அழைத்துச் சென்று கீழே தள்ளி கழுத்தை நெறித்ததாகவும் காலையில் அவர் இறந்தது தெரிய வரவே, கொலையை மறைக்க நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து விக்னேஷ் மற்றும் சதீஷை அவர்கள் கைது செய்தனர்.