​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆண் நண்பருடன் ஏற்பட்ட தகராறால் விமான நிலையத்தில் பெண் விபரீத முயற்சி... பெரும் போராட்டத்துக்குப் பின் மீட்பு

Published : Jun 10, 2023 6:21 PM

ஆண் நண்பருடன் ஏற்பட்ட தகராறால் விமான நிலையத்தில் பெண் விபரீத முயற்சி... பெரும் போராட்டத்துக்குப் பின் மீட்பு

Jun 10, 2023 6:21 PM

ஐதராபாத் விமான நிலைய மாடியில் இருந்து குதிக்க முயன்ற பெண் பெரும் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டார்.

தற்கொலைக்கு முயன்ற பெண் பெங்களூரை சேர்ந்த சுவேதா என்பவர் ஆவார். ஐதராபாத்தில் இருந்து தமது சொந்த ஊருக்கு திரும்புவதற்கு திரும்புவதற்காக ஷம்ஷாபாத் விமான நிலையத்திற்கு சென்றிருந்த போது, அவரது ஆண் நண்பருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து விமான நிலையத்தின் 2-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றதார். அங்கு வந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் அந்த பெண்ணை மீட்டனர். அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.