குளித்தலை அருகே நிலப்பிரச்சனையில் அண்ணனை கை கால்கள் கட்டி வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்த தம்பி, அவரது மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
ராசாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த 72 வயது கருப்பண்ணனுக்கும் அவரது தம்பியான 68 லயது காத்தவராயனுக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 7-ஆம் தேதி வீட்டில் இருந்து தோட்டத்திற்கு சென்ற கருப்பண்ணன், தென்னந்தோப்பில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார்.
இது பற்றி விசாரணை நடத்திய போலீசார், சந்தேகத்தன் பேரில் தம்பி காத்தவராயனை பிடித்து விசாரித்தனர்.
அதில் தனது மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து அண்ணனை கட்டையால் அடித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்றதை காத்தவராயன் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.