​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கனடாவில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீ.. 11 மில்லியன் ஏக்கர் பரப்பளவு வனப்பகுதி கருகியது

Published : Jun 10, 2023 5:46 PM

கனடாவில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீ.. 11 மில்லியன் ஏக்கர் பரப்பளவு வனப்பகுதி கருகியது

Jun 10, 2023 5:46 PM

கனடாவில் கொழுந்து விட்டு எரிந்து வரும் காட்டுத் தீ மேற்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் வரை பரவியுள்ளது.

அங்குள்ள டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயால் அப்பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கியூபெக் என்ற மாகாணத்தில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சியால் வட அமெரிக்க நகரங்கள் பலவற்றையும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. காட்டுத் தீயால் கனடாவில் சுமார் 11 மில்லியன் ஏக்கர் பரப்பளவுள்ள வனப்பகுதி தீயில் கருகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.