​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடலுக்கடியில் 100 நாட்கள் தங்கியிருந்த முன்னாள் ராணுவ வீரர்... உடல் உயரத்தில் அரை இஞ்ச் குறைந்திருப்பதாக தகவல்

Published : Jun 10, 2023 4:26 PM

கடலுக்கடியில் 100 நாட்கள் தங்கியிருந்த முன்னாள் ராணுவ வீரர்... உடல் உயரத்தில் அரை இஞ்ச் குறைந்திருப்பதாக தகவல்

Jun 10, 2023 4:26 PM

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் அருகே கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட அறையில் 100 நாட்கள் தங்கியிருந்து முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

கடற்படை முன்னாள் தளபதியும், உயிரியல் மருத்துவருமான ஜோசப் டிடூரி, நீருக்கடியில் நிலவும் உயர் அழுத்தத்தால் உடலில் நேரும் மாறுதல்களை ஆராயும் முயற்சியில் களமிறங்கினார். சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக, கடலுக்கடியில், 30 அடி ஆழத்தில் அமைக்கப்பட்ட 100 சதுரடி அறையில் அவர் 100 நாட்கள் தங்கி விட்டு தற்போது வெளியே வந்துள்ளார்.

நீருக்கு அடியில் இருந்ததால் தனது உயரம் அரை இன்ச் குறைந்ததுடன், உடலின் கொலஸ்டிரால் அளவும் குறைந்துள்ளதாக டிடூரி தெரிவித்துள்ளார். உயரழுத்தத்தால் வயது முதிர்வை தாமதப்படுத்த முடியுமா என மேற்கொண்டு ஆராய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.