​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் 2 பயணியர் விமானங்கள் மோதி விபத்து

Published : Jun 10, 2023 3:01 PM

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் 2 பயணியர் விமானங்கள் மோதி விபத்து

Jun 10, 2023 3:01 PM

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் 2 பயணியர் விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவத்தையடுத்து விமான நிலையத்தின் ஒரு ஓடுபாதை சிறிது நேரம் மூடப்பட்டது.

இதனால் சில விமானங்களின் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. பாங்காக் புறப்பட தயாராகிக் கொண்டிருந்த தாய் ஏர்லைன்ஸ் விமானத்தின் வலது இறக்கை, தாய்பே புறப்பட தயாராகிக் கொண்டிருந்த ஈவா ஏர் விமானத்தின் பின்புறம் மோதியது.

இதில் தாய் ஏர்லைன்ஸ் விமானத்தின் வலது இறக்கையின் ஒரு பகுதி உடைந்ததாகக் கூறப்படுகிறது. டேக்சி வேயில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.