​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீண்ட நேரம் போர் நடந்தாலும் தாக்குபிடிக்கும் வலிமை... அரபிக்கடலில் செயல் திறனை வெளிப்படுத்திய இந்திய கடற்படை

Published : Jun 10, 2023 2:54 PM

நீண்ட நேரம் போர் நடந்தாலும் தாக்குபிடிக்கும் வலிமை... அரபிக்கடலில் செயல் திறனை வெளிப்படுத்திய இந்திய கடற்படை

Jun 10, 2023 2:54 PM

கடலில் நீண்ட நேரம் போர் நடந்தாலும் தாக்குபிடிக்கும் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் இந்திய கடற்படை சார்பில் போர் ஒத்திகை நடைபெற்றது.

அரபிக்கடல் பகுதியில் நடைபெற்ற போர் பயிற்சியில், இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா, ஐ.என்.எஸ் விக்ராந்த் ஆகிய போர்க்கப்பல்கள், 35க்கும் அதிகமான போர் விமானங்கள், மிக் 29K பைஃடர் ஜெட், மற்றும் பல்வேறு ஹெலிகாப்டர்களின் செயல் திறன் உறுதி செய்து கொள்ளப்பட்டது.

இந்திய கடற்படையின் தொழில்நுட்ப வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இந்த போர் பயிற்சி நடைபெற்றதாகவும், இதன் மூலம் இந்திய பெருங்கடலை தாண்டியும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட முடியும் என்று நிரூபித்து உள்ளதாகவும் கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.