​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தென்மாநிலங்களுக்கு முக்கிய பங்கு - நிதி ஆயோக் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் பேச்சு

Published : Jun 10, 2023 12:44 PM

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தென்மாநிலங்களுக்கு முக்கிய பங்கு - நிதி ஆயோக் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் பேச்சு

Jun 10, 2023 12:44 PM

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தென்மாநிலங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகநிதி ஆயோக் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்.

சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர், சுகாதாரம், கல்வி, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் தென் மாநிலங்கள் எப்போதும் 'நம்பர் ஒன்' இடத்தில் இருப்பதாக கூறினார்.

7 சதவீதமாக இருந்து வரும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்தது 10 சதவீதமாக உயர வேண்டும் என்றும், இதன் விளைவாக தனிநபர் வருமானம் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு தென் மாநிலங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.