​​ உலகக் கோப்பை கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் வெல்ல போவது France தான்..! குறிசொல்லும் கிளி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகக் கோப்பை கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் வெல்ல போவது France தான்..! குறிசொல்லும் கிளி


உலகக் கோப்பை கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் வெல்ல போவது France தான்..! குறிசொல்லும் கிளி

Jul 14, 2018 9:43 PM

உலகக் கோப்பை கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில், வெற்றி பெறப் போவது ஃபிரான்ஸ் அணி தான் என நியூட்டன் எனும் குறிசொல்லும் கிளி கணித்துள்ளது.

கால்பந்து ஆட்டத்தில் உலகக் கோப்பை தொடங்கியது முதல், வெற்றி பெறும் அணி எது என்பதைக் கணிக்க விலங்குள், பறவைகளைக் கொண்டு குறி கேட்பது நடந்து வருகிறது. அந்த வகையில் பாரிசில் உள்ள தாவரவியல் பூங்காவில் உள்ள நியூட்டன் எனும் கிளி, அட்டைப் பெட்டியில் உருவாக்கப்பட்ட சிறிய கால்பந்தாட்ட மைதான மாதிரியில் களமிறங்குகிறது.

இறுதிப் போட்டியில் களமிறங்கும் குரோஷியா மற்றும் ஃபிரான்ஸ் கொடிகள் ஒட்டப்பட்ட அந்த மைதானத்தில் தமது அலகைக் கொண்டு கிளி பந்தை இங்கும், அங்குமாக உருட்டி விளையாடுகிறது. அதன் முடிவில் ஃபிரான்ஸ் அணிக்காக கோல் அடித்து வெற்றி பெறும் அணி ஃபிரான்ஸ் தான் என அக்கிளி கணித்துள்ளது.