​​ திருச்செந்தூர் கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் தொடர்பாக விதிக்கப்பட்ட உத்தரவை, ஜூலை 23ஆம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்செந்தூர் கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் தொடர்பாக விதிக்கப்பட்ட உத்தரவை, ஜூலை 23ஆம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த உத்தரவு

திருச்செந்தூர் கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் தொடர்பாக விதிக்கப்பட்ட உத்தரவை, ஜூலை 23ஆம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த உத்தரவு

Jul 14, 2018 2:24 AM

திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் தொடர்பாக விதிக்கப்பட்ட உத்தரவை, ஜூலை 23ஆம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சுப்ரமணியசுவாமி கோயிலில் அறநிலையத்துறையின் கீழ் பணியில் இல்லாத ஊழியர்கள் குறித்து புகார் எழுப்பி பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பயோமெட்ரிக் முறையை உடனடியாக நடைமுறைப்படுத்துவதோடு,

கோயிலில் நடக்கும் பூஜைகள் அனைத்தும் சட்டப்படி நியமிக்கப்பட்டவர்களால் நடக்கிறது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இது தொடர்பாக கோவில் நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் திருப்தி இல்லை என்று கூறிய நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை ஜூலை 23ஆம் தேதிக்குள்

நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.