​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவில் அதிவேகமாக கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழப்பு

Published : Jul 13, 2018 8:05 PM

அமெரிக்காவில் அதிவேகமாக கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழப்பு

Jul 13, 2018 8:05 PM

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் போக்குவரத்து சிக்னலை அலட்சியப்படுத்தியதோடு அதிவேகமாக சென்று கர்ப்பிணி மீது காரை ஏற்றிக் கொன்றுவிட்டு தப்பிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

சான் பெர்னார்டினோ (San Bernardino ) பகுதியில் கடந்த புதன் கிழமை இரவு பதினொன்றரை மணி அளவில் கர்ப்பிணிப் பெண் சாலையைக் கடந்து கொண்டிருந்தார். மறுபுற சாலையை அடைவதற்கு சற்று முன்பதாக அதிவேகமாக வந்த கார் அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் கர்ப்பிணியும், அவரது வயிற்றில் இருந்த சிசுவுடன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி தப்பிய பெண், சிறிது தூரத்தில் மரத்தின் மீது மோதியதாகவும், அதன் பின் அவரை யாரே அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் உதவியோடு போலீசார் அப்பெண்ணைத் தேடி வருகின்றனர். விபத்து நடந்த போது சாலையில் அனைத்து தடங்களையும் கவனித்து பின் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கும் மஞ்சள் நிற விளக்கு விட்டு விட்டு ஒளிர்ந்து கொண்டிருந்த போதும், அதை உதாசினப்படுத்தியதால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது.