​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானுக்கு தகாத உறவில் 5 குழந்தைகள்

Published : Jul 13, 2018 5:00 PM



பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானுக்கு தகாத உறவில் 5 குழந்தைகள்

Jul 13, 2018 5:00 PM

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கானுக்கு, தகாத உறவின் மூலம் 5 குழந்தைகள் உள்ளதாக அவரது முன்னாள் மனைவி எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் காட்சித்தலைவரான இம்ரான் கான், வரும் 25 -ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவர் 2-வது மணம் முடித்து விவாகரத்து செய்து விட்ட ரெஹம் கான் ((Reham Khan)), தனது பெயரிலேயே சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.

அதில், இம்ரான்கானுடனான 10 மாத இல்வாழ்க்கை குறித்தும் எழுதியுள்ளார். அதன்படி, இம்ரான்கான் ஏராளமான பெண்களுடன் தகாத உறவு வைத்திருந்ததாகவும், இதன் மூலம் பிறந்த 5 குழந்தைகளில் சிலர் இந்திய பெண்களுக்கு பிறந்தவர்கள் என்றும் ரெஹம் கான் கூறியுள்ளார். இம்ரான்கான் போதைப் பழக்கம் உடையவர் என்றும்,  குறிப்பிட்டுள்ளார்.