நலத்திட்ட உதவி வழங்குவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி..! பொதுமக்களிடம் பணம் வசூலித்த தம்பதியர் கைது
Published : Mar 27, 2023 8:56 AM
நலத்திட்ட உதவி வழங்குவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி..! பொதுமக்களிடம் பணம் வசூலித்த தம்பதியர் கைது
Mar 27, 2023 8:56 AM
ராணிப்பேட்டையில் 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சமையல் பொருள் அடங்கிய நலதிட்ட உதவிகளை வழங்குவதாகக் கூறி 600-க்கும் மேற்பட்டவர்களிடம் 8 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை அடுத்த சீனிவாசன் பேட்டையில் இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஏழை எளிய கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் மதிப்பிலான சமையல் பொருட்கள் அடங்கிய நல திட்ட உதவி வழங்கப்பட்டது.
இதில் பொருட்கள் குறைவாக இருப்பதாக கூறி பயனாளிகள் மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து நலதிட்ட உதவிகள் வழங்கிய மீரா மற்றும் அவரது கணவர் தயாளன் கைது செய்யப்பட்டனர்.