​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன்

Published : Mar 27, 2023 8:20 AM

முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன்

Mar 27, 2023 8:20 AM

முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் அணி பட்டத்தை வென்றுள்ளது.

மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது. முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. கேப்டன் மெக் லேனிங் 35 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19 புள்ளி 3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்ததால், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.