​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை... சிகிச்சை பெற வந்தவர்கள் செவிலியரால் அலைக்கழிப்பு

Published : Mar 27, 2023 8:15 AM

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை... சிகிச்சை பெற வந்தவர்கள் செவிலியரால் அலைக்கழிப்பு

Mar 27, 2023 8:15 AM

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் இரவில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வந்த 2 பேர் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

விபத்தில் சிக்கிய சரவணகுமார், அருண்குமார் ஆகிய இருவரை அப்பகுதி மக்கள் சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு போதிய மருத்துவர், செவிலியர் இல்லாததால் ஒரு மணிநேரத்துக்கும் மேல் சிகிச்சை அளிக்காமல், ஆம்புலன்சுக்கும் ஏற்பாடு செய்யாமல் அவர்களை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

விளாத்திக்குளம் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்,செவிலியர் நியமிக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.