​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி பாஜக பிரமுகர் கொலை.. போலீசார் விசாரணை!

Published : Mar 27, 2023 7:03 AM

புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி பாஜக பிரமுகர் கொலை.. போலீசார் விசாரணை!

Mar 27, 2023 7:03 AM

புதுச்சேரி வில்லியனூரில் பாஜக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கணுவாப்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமரன் என்பவர் அங்குள்ள பேக்கரி கடையில் நின்று கொண்டிருந்த போது, அங்குவந்த மர்ம கும்பல் திடீரென அவர் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் தாக்கியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

தாக்குதலில் நிலைகுலைந்து கீழே சரிந்த அவர், சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்த போலீசார், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குற்றாவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.