​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 3வது வார பூச்சொரிதல் விழா: திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அம்மனுக்கு பூச்சாற்றி வழிபாடு!

Published : Mar 27, 2023 6:59 AM

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 3வது வார பூச்சொரிதல் விழா: திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அம்மனுக்கு பூச்சாற்றி வழிபாடு!

Mar 27, 2023 6:59 AM

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற 3வது வார பூச்சொரிதல் விழாவில் மாவட்ட காவல்துறை சார்பில் டிஐஜி, எஸ் பி உள்ளிட்ட 300 காவல்துறையினர் பூத்தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சாற்றினர்.

யானை, குதிரை ஊர்வலத்துடன் தட்டுகளில் பூக்களை ஏந்தி, தேரோடும் வீதியில் ஊர்வலமாக காவல்துறையினர் சென்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மனுக்கு பூச்சாற்றி வழிபட்டனர்.