​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய 9 நாட்களாக போலீசார் தேடுதல் வேட்டை!

Published : Mar 27, 2023 6:53 AM

காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய 9 நாட்களாக போலீசார் தேடுதல் வேட்டை!

Mar 27, 2023 6:53 AM

காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்யமுடியாமல் பஞ்சாப் போலீசார் திணறி வருகின்றனர்.

அவர் நாளொரு வேடத்தில் ஹரியானா, டெல்லி என்று பல இடங்களில் தென்பட்டதாக கூறப்படுகிறது. கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு அம்ரித்பாலுக்கு அடைக்கலம் தந்து உதவிய நபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நேற்று பல்வந்த் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் அம்ரித்பாலின் கூட்டாளி கோரக் பாபாவை தப்பிக்க உதவியதாக கூறப்படுகிறது. கோர்க்கா பாபா கைது செய்யப்பட்டதையடுத்து பல்வந்த் சிங்கும் சிக்கினார்.

100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை கைது செய்துள்ள போலீசார் 7 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.