​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிதி நிறுவன மேலாளரை காரில் கடத்தி ரூ.16.50 லட்சம் கொள்ளை.. சினிமா பாணியில் அரங்கேறிய கடத்தல்..!

Published : Mar 26, 2023 7:47 AM

நிதி நிறுவன மேலாளரை காரில் கடத்தி ரூ.16.50 லட்சம் கொள்ளை.. சினிமா பாணியில் அரங்கேறிய கடத்தல்..!

Mar 26, 2023 7:47 AM

திருவண்ணாமலை அருகே தனியார் நிதி நிறுவன மேலாளாரை காரில் கடத்திய மூன்று பேரை கைது செய்த போலீசார், 6 லட்சம் ரூபாயுடன் தப்பிச் சென்ற நான்கு பேரை தேடி வருகின்றனர்.

வந்தவாசியில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் மணிமாறன், வசூலான 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் செய்யாறு நோக்கி சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆரணி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், காரில் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டு துரத்திச் சென்று காரை மடக்கி மணிமாறனை மீட்டு மூவரை கைது செய்தனர்.

அதே நிறுவனத்தில் பணிபுரியும் தங்கவேல் மற்றும் அஜித்குமார் ஆகிய இருவரும் பணத்தை கொள்ளை யடிக்க திட்டமிட்டு, தனது கூட்டாளிகளுடன் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.